அனுராதபுர இராச்சியம் (
Anuradhapura Kingdom) அல்லது
அனுராதபுர இராசதானி (
சிங்களம்:
අනුරාධපුර රාජධානිය என்பது
இலங்கையின் முதல் திட்டமிடப்பட்ட இராச்சியம் ஆகும். இது இலங்கையில் அதிக காலம் ஆட்சியில் இருந்த இராசதானி ஆகும்.
பண்டுவாசுதேவ மன்னனின் மகனான
பண்டுகாபய மன்னனால் உருவாக்கப்பட்டது. அவனே
அனுராதபுரத்தைத் தலைநகரமாக மாற்றினான். அனுராதபுர இராச்சியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக நாட்டிற்கு
புத்த மதம் அறிமுகமானதைக் குறிப்பிடலாம். இவ்விராச்சியம் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் இருந்தது.
No comments:
Post a Comment